4.28.2006

என்றும் அன்புடன்...


எல்லோருக்கும் வணக்கம்,
இப்போ நாம இருக்குற நிலைமயில நம்ம எல்லோருக்கும் தேவையானது ஒரு அமைதியான நிம்மதியான வாழ்க்கைனு தான் நான் சொல்லுவேன். நாம எல்லோரும் எங்க ஓடிக்கிட்டு இருக்கோம்னு ஒரு தடவ நின்னு யோசிச்சு பாருங்க.

எனக்கு எங்கேயோ படிச்ச கவிதை நினைவுக்கு வருகிறது.

டாலர்களுக்காக 20 மணி நேரம் தேய
கண்கள் தயாராகிவிட்டது...
நம் ஒவ்வொருவர் வீட்டுத்
திண்ணையிலும் முற்றத்திலும்
வாழப்படாமல் வாழ்க்கை மீந்து
கிடக்கிறது....

நாம்
உறவுகளைவிட்ட்டு பயணப்பட்டு
வெகுதூரம் வந்துவிட்டோம்..
வயிற்றுக்கு மேலே கொன்சமேனும்
இதயம் இருந்தால்...
உடனடியாக அலுவலகத்தைவிட்டு
வெளியே வாருங்கள்
பொடி நடையாக வீட்டை
நோக்கிச் செல்வோம்..

நண்பா..
நாம் வாழ்க்கை கரையில்
சில்லறை பொறுக்கிகொண்டிருக்கிறோம்...
நம் சட்டைப்பையில் இருந்து
கிளின்சல்கள் கொட்டிக்கொண்டிருப்பதை
கவனிக்காமல்....

இத படிச்சவுடனே நமக்கெல்லாம் என்ன தோனுது.... எனக்கு எழுதுங்க.

-மாறன்

4 Comments:

At 5:30 AM, Blogger செந்தழல் ரவி said...

வருகை நல்வரவாகுக...

 
At 2:57 AM, Blogger செந்தழல் ரவி said...

This comment has been removed by a blog administrator.

 
At 6:01 AM, Blogger செந்தழல் ரவி said...

அருமை டா...கலக்க ஆரம்பிக்கற...

 
At 3:25 AM, Blogger இந்தியன் said...

வருக வருக!!!

வணக்கம் நண்பா, உன் வருகைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா.
ஒர் வருத்தம் உள்ளது. உன் அனுமதி இல்லாமல் உன் இனிமையான, அழகான, ஆழ்ந்த கவிதையை என் தளத்தில் பதித்து வெளியயிட்டு விட்டேன். அதில் உன் பெயரை குறிப்பிட்டுள்ளேன்.

புகைபடத்தில் பார்த்தாலும் உன் பாடல்கள் (இளமையெனும்...) என் ஞாபகங்களில். வாழ்க!!! வாழ்க!!!

 

Post a Comment

<< Home