5.17.2006

கவலையை களை...

எதுக்கு நாம கவலை படனும். நான் என்னோட பாதைல ஏகப்பட்டபேர சந்திச்சுக்கிட்டுவர்றேன். ஒவ்வொருதருக்கும் ஒரு கவலை. ஒருதனுக்கு பணம் இல்லையேனு, வெற ஒருத்தனுக்கு குடும்பம் சரி இல்லனு, இன்னொருத்தனுக்கு இனம் புரியாத கவலைனு அடுக்கிகிட்டே பொகலாம். ஏன் இதெல்லம்....

ஒரு சின்ன கதை சுவாமி சுகபோதானந்த்தா சொன்னது...
-குதிரை பொல இருப்பான் அவன், மிகக் கம்பீரமான தோற்றம். காற்றில் அலையும் தலைமுடி. நேர்த்தியான உடைகள், புன்னகை பாடும் கண்கள். பெயர் சொன்னாலே 'ஓ அவரா..?' என்று பெங்களூர் ராக் ரசிகர்களிடையே பிரபலம் அந்த இளைஞன். பெயஎ, புகழ், தேவைக்கு அதிகமாகவே வந்து சேரும் பணம் என ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்டவன். அவன் ஒரு நாள் என்னை சந்தித்தான். 'அவனா இவன்!' என்று அதிர்ச்சி அடையும் அளவு நொறுங்கிபோயிருந்தான். அந்த இளைஞன் என்னிடம் சொன்னதை வார்த்தை மாறாமல் அப்படியே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
"எங்கள் குடும்பம் சந்தோஷத்துக்கு குறைவில்லாத குதூகலமான குடும்பம். அன்று என் 22 வது பிறந்தநாள். நான் உடைந்து உதிர ஆரம்பித்ததும் அன்றுதான். ஆம் என் தாய் வேரு ஒருவனுடன் உல்லாசமாக இருந்ததை அன்றுதான் நாங்கள் பார்த்தோம். அப்பாவோடும், தங்கையோடும் கடை வீதிக்கு சென்றுவிட்டு திறும்பும் போதுதான் அதை பார்க்க நேர்ந்தது. அம்மாவை கண்டித்தார் அப்பா. தங்கை நெஞ்சு வலிக்க அழுதாள். எங்கே மிக மோசமாக நடந்துகொண்டுவிடுவேனோ என்ற பயத்தில் நான் எதுவும் பேசாமல் அமைதியாய் இருந்துவிட்டேன். ஆனால் என் தாயை எதுவுமே கரைக்கவில்லை. இனி மறைப்பதற்கு எதுவும் இல்லை என்று அவனுடனே ஓடிப்போய்விட்டாள். ஒரு சில நாட்களிலேயே என் அப்பா முழு நேர குடிகாரர் ஆகிவிட்டார். அடுத்த சில வாரங்கலளிலேயே என் தங்கை தன் காதலனுடன் வாழ்வதற்க்காக வீட்டை விட்டு வெளியே கிளம்பிவிட்டாள். என் சோகம் இதோடு நின்றிருந்தால் கூட நான் ஆறுதல் அடைந்திருக்க சாத்தியம் உண்டு. ஏழு எட்டு இரவுகளுக்குள்ளேயே அவனுக்கு என் தங்கை சலித்துவிட்டாள். வீட்டை விட்டே துரத்திவிடப்பட்டாள். என் தங்கை போன இடம் தெரியவில்லை, ஊர் ஊராக தேடினேன்... கண்டுபிடிக்கவே முடியவில்லை.
என் தங்கை காணாமல் போய் ஒரு வருடம் இருக்கும். ஒரு நாள் என் குடும்ப நண்பர் ஒருவர் அந்த அதிர்ச்சித்தகவலை தந்தார் ' உன் தங்கைக்கு பைத்தியம் பிடித்துவிட்டால், அவளை மனநலம் குன்றியவ்ர்கள் விடுதியில் சேர்த்துவிடுவதா..?' என்று என்னிடம் கோபப்பட்டார். பதறிபோன நான் அவரிடம் அந்த விலாசம் வாங்கிகொண்டு அந்த விடுதிக்கு ஓடினேன். அங்கே கிளிந்த நாராக என் தங்கை ஒரு மூலையில் சுருண்டு படுத்திருந்தாள். 'ஒரு வாரம் இருக்கும் சார் ரெட் லைட் பகுதியில் இருக்கும் சில பெண்கள் இவளை இங்கே கொண்டுவந்து சேர்த்தார்கள்' என்றார் அந்த விடுதியின் காப்பாளராக இருந்த பெண்மணி. இடைபட்ட காலத்தில் என்ன நடந்திருக்கும் என்று யூகிக்க என்னால் முடிந்தது. தானாக குளிக்கவோ, உடை மாற்றிக்கொள்ளவோ முடியாத அளவுக்கு சுயநினைவு இல்லாத தங்கையை தன்னந்தனி ஆண்மகனாக இருந்து கவனித்து கொள்வது எத்தனை பெரிய துன்பம் என்பதை விளக்கவேண்டியது இல்லை. ஒரு நாள் வேலை விசயமாக வெளியே போய்விட்டு மாலையில் வீடு திரும்பினேன். வீட்டின் எதிரே மோட்டார் பைக்கை நிருத்தக்கூட இல்லை... 'என்ன மனுசன்யா நீ .. உன் தங்கச்சிக்குத்தான் புத்தி சரியில்ல.. உங்க அப்பனும் ஒரு குடிகாரன். நீ இந்த பக்கம் போனதுமே அவன் அந்த பக்கம் சாராய கடையை தேடி பொய்ட்டான். போ..போய் பார் உன் தங்கச்சி உடம்புல ஒட்டு துணி இல்லாம மார்கெட்ல டான்ஸ் ஆடிகிட்டு இருக்கா...' என்று அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னபோது நான் நெருப்பில் விழுந்த புழுவாக துடித்தேன். கையில் கிடைத்த புடவையை சுருட்டிக்கொண்டு கதறி அழுதபடி மார்கெட்டுக்கு ஓடினேன். அங்கே பிறந்த மேனியாக என் தங்கை-சுயநினைவு இன்றி. சாலையோரம் ஒரு கூட்டமே நின்று வேடிக்கை பார்த்தது. ஒரு மாதிரி மீட்டு அவளை வீட்டுக்கு இழுத்து வந்தேன். அடுத்த நாள் அவளை ஒரு மனநல மருத்துவரிடம் அழைத்து சென்றேன். அவளை பரிசோதித்த டாக்டர் என்னென்னவோ சிகிச்சைகள் குடுத்தார். எதுவும் பலன் அளிக்கவில்லை. கடைசியில் ஒரு நாள் என்னை தனியாக அழைத்து 'சிவப்பு விளக்கு பகுதியில் இருந்த போது உங்கள் தங்கை தொடர்ந்து பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறாள். அது போன்ற தருணம் ஒன்றில்தான் அவள் பாதிக்கப்பட்டிருக்ககூடும். அதனால் யாராவது ஒருவர் உங்கள் தங்கையுடன் உறவு கொண்டால் அந்த அதிர்ச்சியில் ஒருவேலை அவள் குணமடையகூடும். அதனால் உங்களுக்கு தெரிந்த யாரையாவது அழைத்து வாருங்கள்! ' என்றார். எனக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. என் தர்மசங்கடத்தை புரிந்து கொண்ட டாக்டரே அதற்க்கும் உதவுவதாக சொன்னார். தங்கை குணமானால் போதும் என்ற மனநிலையில் இருந்த நான் அதற்கு தலையாட்டினேன். டாக்டரின் இந்த வைத்தியம் ஒரு வாரகாலம் தொடர்ந்தது. அந்த சந்தர்ப்பதில்தான் ஒரு நாள் அந்த டாக்டர் ஒரு அயோக்கியன், வக்கிரபுத்தி பிடித்து அலைபவன் என்பது புரிந்தது. அதன்பிறகு எந்த டாக்டரிடமும் செல்லவில்லை. வீட்டுக்குள்ளேயே தங்கையை வைத்து கவனித்து வந்தேன். ஒரு நாள் காலையில் எழுந்து பார்த்தபோது தங்கை காணவில்லை, படபடப்பாக ரயில்நிலையம் சென்ற எனக்கு தாளமுடியாத அதிர்ச்சி காத்திருந்தது. ' ஆமா சிவப்பு சுடிதார் போட்ட ஒரு பொண்ணு மும்பை ரயிலில் ஏறிப்போச்சு குண்டா வெத்தலை மென்னுகினு இருந்த ஒரு பொம்பளதான் டீ தண்ணி வாங்கி குடுத்து கூட்டிகினு போகுது. ஆமா நீ ஏன் அந்த பொண்ண பத்தி கேக்குற? அது என்ன உன்னோட பார்ட்டியா? என்று ஒரு போர்ட்டர் கேட்டார். நான் என்ன செய்கிறேன் என்று தெரியாமல் அந்த போர்ட்டரை ஓங்கி கணணத்தில் அடித்துவிட்டேன். இதை பார்த்த மற்ற போர்ட்ட்ர்க்ள் என்னை துவட்டி எடுத்துவிட்டனர். ஒரு வாரகாலம் சிகிச்சை எடுத்துக்கொண்டு இப்பொழுதுதான் நர்சிங்ஹொமில் இருந்து வருகிறேன். என் தங்கையை தேடுவதற்கு என் உடம்பில் தெம்பு இல்லை. மனதிலும் வலிமை இல்லை."
-அந்த இளைஞனால் மேற்கொண்டு எதுவும் பேசமுடியவில்லை. வாய் விட்டு நெடுநேரம் அழுதான்.. பின் ஆத்திரத்துடன்.... "கர்த்தர் ஏன் என்னை இப்படி சோதிக்கிறார் ? நான் என்ன பாவம் செய்தேன்.? என் தங்கை என்ன பாவம் செய்தாள்? சோதிப்பதற்கு ஒரு அளவு வேண்டாமா? கருணையே உருவான கடவுள் ஏன் இப்படி அடுக்கடுக்காக சோதிக்கிறார்?" என்று கேட்டு சின்ன குழந்தையை போல தேம்பி தேம்பி அழுதான்.
அந்த இளைஞனின் மனம் சமநிலையை அடையும்வரை காத்திருந்துவிட்டு சொன்னேன்.
-இயற்கயில் நடைபெறும் ஒவ்வொரு விசயத்துக்கும் நாம் காரணம் கண்டுபிடிக்க முடியாது. சக்ராயுதபாணியாக விஷ்ணு விளங்குவது தீமையை அழிப்பதற்கு மாத்திரம் அல்ல; உலகில் துக்கமும் சந்தோஷமும் மாறி மாறிவரும் என்பதை உணர்த்துவதற்க்காகவும்தான்.
ஒடிக்கொண்டிருக்கும் நதியை நம்மால் பின்னோக்கி ஓடசெய்ய முடியாது. அதுபோலத்தான் நடந்து முடிந்துவிட்ட விசயங்களை நம்மால் மாற்றமுடியாது. உங்களின் சோகம் மிகப்பெரியது. அதனால் அதை நியாயப்படுத்துவதற்க்காக இதை சொல்வதாக நினைக்க வேண்டாம். ' என்று சொல்லிவிட்டு அவரிடம் நான் சொன்ன விசயம் இது.

-ஒரு பெரிய பிரச்சினையோ அல்லது கஷ்டமோ வரும்போதுதான் மனிதனுக்கு அவனின் ஐம்புலன்கலும் விழித்துகொள்கின்றன. இந்த சோதனையிலிருந்து மீண்டு வருவது எப்படி என்று அவன் திட்டமிட்டு செயல்படும்போதுதான் அவனது விழிப்புண்ர்வு உச்சகட்டத்தில் செயல்படுகிறது. அதனால் பிரச்சினைகளையும் கஷ்டங்களையும் கடவுள் நமக்கு கொடுப்பது நம்மை மேம்படுத்துவதற்கு என்று ஏன் எடுத்துக்கொள்ளகூடாது. ? விதை என்ற அந்தஸ்தை இழந்தால்தானே அது செடியாக மாறமுடியும்? செடி என்ற அந்தஸ்தை இழந்தால்தானே அது மரமாக பூத்து குலுங்க முடியும். ஒன்றை இழந்தால் தான் இன்னொன்று கிடைக்கும். இதுதான் இறைவனின் நியதி.
கடிகாரத்தின் பெண்டுலம் இடது பக்கத்திற்கும் வலது பக்கத்திற்கும் மாறிமாறிச் செல்வதைப்போல வாழ்க்கையில் வெற்றியும்-தோல்வியும், சுகமும்-துக்கமும் மாறிமாறி வரும்.
'சுகம் என்பது ஆண்டவன் கொடுக்கும் பிரசாதம்... துக்கம் என்பது ஆண்டவன் கொடுக்கும் மஹாபிரசாதம்.... (ஆதி சங்கரரின் ஆயிரம் அர்த்தங்கள் நிரைந்த அருளுரை இது.)

இப்ப யோசிங்க...

தொடரும்...

-மாறன்

4.28.2006

என்றும் அன்புடன்...


எல்லோருக்கும் வணக்கம்,
இப்போ நாம இருக்குற நிலைமயில நம்ம எல்லோருக்கும் தேவையானது ஒரு அமைதியான நிம்மதியான வாழ்க்கைனு தான் நான் சொல்லுவேன். நாம எல்லோரும் எங்க ஓடிக்கிட்டு இருக்கோம்னு ஒரு தடவ நின்னு யோசிச்சு பாருங்க.

எனக்கு எங்கேயோ படிச்ச கவிதை நினைவுக்கு வருகிறது.

டாலர்களுக்காக 20 மணி நேரம் தேய
கண்கள் தயாராகிவிட்டது...
நம் ஒவ்வொருவர் வீட்டுத்
திண்ணையிலும் முற்றத்திலும்
வாழப்படாமல் வாழ்க்கை மீந்து
கிடக்கிறது....

நாம்
உறவுகளைவிட்ட்டு பயணப்பட்டு
வெகுதூரம் வந்துவிட்டோம்..
வயிற்றுக்கு மேலே கொன்சமேனும்
இதயம் இருந்தால்...
உடனடியாக அலுவலகத்தைவிட்டு
வெளியே வாருங்கள்
பொடி நடையாக வீட்டை
நோக்கிச் செல்வோம்..

நண்பா..
நாம் வாழ்க்கை கரையில்
சில்லறை பொறுக்கிகொண்டிருக்கிறோம்...
நம் சட்டைப்பையில் இருந்து
கிளின்சல்கள் கொட்டிக்கொண்டிருப்பதை
கவனிக்காமல்....

இத படிச்சவுடனே நமக்கெல்லாம் என்ன தோனுது.... எனக்கு எழுதுங்க.

-மாறன்